பகுத்தறிவுக் கொள்கைகள் என்பது என்ன?
இந்துமதத்தினையும் இந்துக்களையும் சாடுவது மட்டும் தான் பகுத்தறிவா? வேறு எந்த மதத்திலும் மூடநம்பிக்கைகள் இல்லையா? வேறு எந்த மதத்திலும் பிரிவினைகள் இல்லையா?
பெண்களை இன்றளவிலும் அடிமைகளாக வைத்திருக்கும் இஸ்லாத்தில் மூட நம்பிக்கைகள் இல்லையா? என்ன முக்கிய வேலைகள் இருந்தாலும் ஐந்து வேளை கண்டிப்பாக தொழ வேண்டும் என்று சொல்லும் அவர்களின் கொள்கைகள் மூடநம்பிககையாக தெரியவில்லையா? முகத்தை மறைத்துக்கொண்டு தான் பெண்கள் வெளியே வரவேண்டும். அவர்களுக்கு வெளியில் சுதந்திரமாக நடமாடக்கூட உரிமைகள் இல்லாமல் இருப்பது மூடநம்பிக்கை இல்லையா? சாதி என்ற பெயரில்லையே தவிர அவர்களிலும் வேற்றுமைகள் இருக்கததானே செய்கின்றன. ஷியா, சன்னி, சூபி என்று. இதில் ஷியாக்களுக்கு சன்னிகளைக் கண்டால் ஆகாது, இருவரும் சூபிக்களை ஏற்றுக்கொள்வதில்லை. இந்து மதத்தில் மட்டும் தான் எல்லாத் தவறுகளும் நடப்பது போல பேசுகிறார்கள். சுயமரியாதைக் கொள்கை இருக்கிறவர்கள் தைரியம் இருந்தால் அவர்களின் மூடநம்பிக்கைகளை சாடட்டும்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்பது இந்து மதத்தில் உள்ள ஒரு பிரிவு என்று சொல்லும் போ அந்த மதத்தினை விட்டு வெளியேறி மதம் மாறியவர்கள் அதே சலுகைகளை அனுபவிக்க நினைப்பது எவ்வாறு பொருந்தும். கிறிஸ்தவர்களாகவும் இஸ்லாமியர்களாகவும் மாறிவிட்டப் பிறகு அவர்கள் ஒரே கிறிஸ்தவர் ஒரே இஸ்லாமியர் என்றல்லவா இருக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சிகள், சுய நலப் பகுத்தறிவுவாதிகள் அதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி இன்று மூன்றாம் தர வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒதுக்கீடுகள் எதற்கு? அப்படி உங்களின் கூற்றுப்படி ஒதுக்கீடு அவசியம் என்றால் அது அவர்களின் பொருளாதாரம் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர மதம், சாதியின் பேரால் ஒதுக்கீடு கேட்பது எதற்கு? இந்து மதத்தை குறை சொல்பவர்கள் இஸ்லாத்திலும், கிறிஸ்தவத்திலும் உள்ள கடவுள் நம்பிக்கையை கூடாது என்று சொல்ல வேண்டியது தானே. ஏன் இந்துக்களிடம் மட்டும் பாகுபாடு காட்டுகிறார்கள்? சிந்திக்க வேண்டும். பகுததறிவு என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்க வேண்டிய ஒன்று. அது பாரபட்சமாக இருக்கக்கூடாது. எல்லா மொழிகளுக்கும், எல்லா இனங்களுக்கும் எல்லா மதங்களு்ககும் ஒன்றாக இருக்க வேண்டும். அரசியல் உள் நோக்கங்களுக்காக அவை பயன்படுத்துவதையும் அவற்றிற்கு மதச் சாயம் பூசுவதையும் மனசாட்சியுள்ள எந்த மனிதனும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.
0 comments:
Post a Comment