இது முற்றிலும் சொந்தக் கருத்து, இதை நான் எந்த மதத்தினரும் புண்பட வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. என் மனதில் உள்ள சில உணர்வுகளை தெரிவிக்கவிரும்புவதால் கூறுகிறேன். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்ற திருமூலரின் மூலமந்திரமே என்னுடைய கொள்கையும் கூட. இருப்பினும் அரசியல் நோக்கங்களுக்காக இங்கு நடக்கும் கூத்துக்களைப் பார்க்கும் போது ஒரு சராசரி மனிதனாக இந்தக் கேள்விகளை நான் கேட்க வேண்டியுள்ளது.
1. மதச்சார்ப்பின்மை என்றால் இந்து மதத்தினை மட்டும் சாராதிருப்பதா?
2. மதச்சார்பின்மையைப் பேசும் கட்சிகள் இந்து மதத்தினரையும், இந்துக் கடவுகள்களையும் இழிவுப்படுத்துவது எப்படி அவர்கள் கொள்கைக்கு பொருத்தமாகும்?
3. பிற மதங்களின் பண்டிகைகளில் பங்குகொள்பவர்கள் இந்து மதத்தின் பண்டிகையை மட்டும் கேவலப்படுத்துவது ஏன்?
4. வன்முறையில் ஈடுபடுவதெல்லாம் இந்துக்கள் தான் என்றால் ஆங்காங்கே நிகழும் குண்டுவெடிப்புகளுக்கு இந்துகள் காரணம் அல்லவே?!
5. சபரி மலைக்கு செல்லும் போது வாவரை (பாபர்) தர்காவில் வணங்குவது இந்துக்களின் மதச்சார்பின்மை. நாகூர் தர்காவுக்கும், வேளாங்கன்னி மாதா கோவிலுக்கும் செல்வது இந்துக்களின் மதச்சார்பின்மை. அப்படி இருக்க அமர்நாத் கோவிலுக்கு இடம் வழங்கக்கூடாது என்று போராடுபவர்களையும், பிரிவினைவாதத்தைத் தூண்டுபவர்களையும் ஆதரிப்பவர்களும் எப்படி மதச்சார்பற்றவர்களாவர்?
6. சாதிகள் தான் மதமாற்றத்திற்கு காரணம் என்றால், மதம் மாறிய பிறகும் சாதிகள் அடிப்படையிலான உரிமைகளுக்காக மாறியவர்கள் போராடுவது ஏன்?
7. கடைசியாக ஒரே கேள்வி, மத(மன)மாற்றத்தை வற்புறுத்துபவர்களுக்கு இது... நீங்கள் சொல்லும் கடவுள் தான் உண்மையான கடவுள் என்றால் அவர் ஏன் பல்வேறு மதத்தினராகவும், இனத்தினராகவும் மனிதர்களைப் படைக்க வேண்டும்?
என்னைப் பொறுத்தவரை உண்மையான மதச்சார்பின்மை என்பது அடுத்த மதங்களையும் மதிப்பதுதான். எனக்கு கிறிஸ்தவ நண்பர்களும் உண்டு, இஸ்லாமியர் நண்பர்களும் உண்டு. மதரீதியாக அவர்களின் கடமையான பிரார்ததனை செய்வதையும், தொழுவதையும் அவர்கள் செய்யாத போது அதைக் கண்டித்திருக்கிறேன். நான் பிறந்த மதம் எனக்கு காட்டிய நல்ல வழிகளை பின்பற்றாத போது நான் அடுத்த மதத்திற்கு மாறுவதனால் எந்தப் பயனும் இல்லை. இறைவன் ஒருவன் அவனை நாம் விரும்பிய வடிவில் வழிபடுகிறோம். அது மட்டுமே உண்மை, அவசியமும் கூட.
மனிதர்களின் மனங்களைப் புண்படுத்தாமல் தன் கடமைகளைச் செய்பவர்களே உண்மையாக மதத்தைப் பின்பற்றுபவர்கள், அது என் மதத்தினராக இருந்தாலும் சரி.
நான் இந்து என்பதில் உறுதியாக இருக்கிறேன், அதற்காக மற்ற மதத்தினரை எந்த விதத்திலும் தவறாக எடைபோடமாட்டேன். நானோ அவர்களோ அந்தந்த மதத்தில் பிறந்தது இறைவனின் விருப்பத்தின் பேரில்தான்.
நாம் நாமாக இருப்போம், மனிதர்களாக இருப்போம்!!!
வாழ்க! வளமுடன்!
Saturday, September 27, 2008
மதச்சார்பின்மை எது?!!!
Posted by
Ramesh Nerkundram
at
8:20 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்
கேள்வி. நெட்
Post a Comment